Wednesday, December 7, 2011

Ragas

courtesy: Sri.Venkatesh
நண்பர்களே,

டிசம்பர் சீசன் என்பதால் .. இந்த மாத பதிவை , இசையுடன் தொடங்குவோம்..
இசை எல்லாருக்கும் பிடித்தது.  இசை ரசனை எல்லோருக்கும் உண்டு.
இசையால் இறைவனையே காண முடியும் என்பது நம் புராண இதிகாசங்களில் தெளிவுபடுத்தப்பட்டு உள்ளது.
அபிராமி பட்டர் கதை நாம் அனைவரும் அறிந்ததே.. இசையால் பக்தி.
"இசை கேட்டால் புவி அசைந்தாடும் , அது இறைவன் அருளாகும். ."
இசை என்பது மனிதர்க்கு மட்டும் அல்ல , விலங்குகள், பறவைகள், தாவரங்கள் எல்லாமே மயங்குகின்றன.
கர்நாடக சங்கீதத்தில் உள்ள ராகங்கள் ஒவ்வொன்றுமே நற்பலன்களை தருவதாகவே அமைந்திருக்கிறது. எந்த ராகம் எந்த மாதிரி பலன் தருகிறது, பார்ப்போமா...
ராகங்கள் பலன்கள்
நீலாம்பரி: அழுகின்ற குழந்தையை அமைதிப்படுத்தி உறங்க வைக்கும்.
ஸ்ரீராகம்: பகல் உணவு உண்ட பின் கேட்டால் சுலபாக ஜீரணமாகும்.
சாமா: மனக்கலக்கத்தின் போது கேட்டால் மன அமைதி கிடைக்கும்.
பூபாளம்,: மலய மாருதம் விடியற்காலையில் கேட்டால் உற்சாகம் தானாகப் பிறக்கும்
அஸாவேரி: தலைவலியைப் போக்கும்
கரகரப் பிரிய: பசியை மறக்கச் செய்யும்
பைரவி: காச நோயை தீர்க்கும்
தோடி: ஆஸ்துமாவை குணப்படுத்தும்
ஹிந்தோளம்: வாதம், கப நோய்களை கட்டுப்படுத்தும்
ஸாரங்கா: பித்தக் கொதிப்பை தணிக்கும்.
திருமண வீடுகளில் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் கூட ஒவ்வொரு ராகம் உண்டு.
நாதஸ்வர இசையில் இந்த ராகத்தை வாசிப்பார்கள்.
திருமண விசேஷங்களில் நாதஸ்வரம் வாசிக்கப்படும் ராகங்கள்
மாப்பிள்ளை அழைப்பிற்கு 1. கல்யாணி
புறப்படும் போது 2.சங்கராபரணம்
ஜானவாச ஊர்வலத்தில் 1. தோடி, 2.காம்போதி, 3.கரகரபிரியா
திருமணக்கூடத்தில் நிச்சயதார்த்தம் நடக்கும் போது 1. கனடா, 2.அடானா 
காலையில் 1. கேதாரம், 2.பூபாளம், 3.பிலஹரி
முகூர்த்தத்திற்கு முன்பு 1. தன்யாசி, 2.நாராயணி
முகூர்த்தம் நடக்கும் போது நாட்டைக்குறிஞ்சி
தாலி கட்டும் சமயத்தில் ஆனந்த பைரவி
இசை.. எவ்வளவு அறிந்தாலும். ,எழுதினாலும் , படித்தாலும்,  அதற்க்கு எல்லை இல்லை.
சமயம் கிடைக்கும் பொழுது தொடர்வோம்..
 
 
 
 
இந்த வாரம் உங்கள் காதுகளுக்கு
 
 
"சண்முகப்பிரியா" ராகத்திலுள்ள சினிமாப் பாடல்கள்:

மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன... (தில்லானா மோகனாம்பாள்)
நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே... (பழைய பாடல்)
தம்.. தம். தன தாளம் வரும் (புதிய வார்ப்புகள்)
கண்ணுக்குள் நூறு நிலவா.. (வேதம் புதிது)
தகிட.. தமிதி.. தந்தான.. (சலங்கை ஒலி)

"சுத்த தன்யாசி"
நீயே உனக்கு என்றும் நிகரானவன்   (பலே பாண்டியா)

மீண்டும் அடுத்த வாரம் ,  மற்றொரு   தலைப்புடன் !!!!!!!
நண்பன் நா வெங்கடேஷ்

No comments:

Post a Comment