Tuesday, April 25, 2017

Dayanidheeswarar temple

சிவாயநம. திருச்சிற்றம்பலம்.
*கோவை. கு.கருப்பசாமி.*
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
                  *(6)*
🍁 *சிவ தல அருமைகள், பெருமைகள்.* 🍁
நேரில் சென்று தரிசித்தது போல......
  🍁 *வட குரங்காடுதுறை.* 🍁
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■

*இறைவன்:* தயாநிதீஸ்வரர், 
குலை வணங்கீசர், வாலிநாதர், சிட்டிலிங்க நாதர்.

*இறைவி:*ஜடாகுடேஸ்வரி, அழகுசடை முடியம்மை.

*தலமரம்:* தென்னை.

*தீர்த்தம்:* காவிரி.

சோழநாட்டின் காவிரி வடகரையில் அமைந்துள்ள அறுபத்து மூன்று தலங்களுள் நாற்பத்தொம்பதாவது தலமாகப் போற்றப்படுகிறது.

*இருப்பிடம்.:*
கும்பகோணம்--திருவையாறு சாலையில் சுவாமிமலை, உமையாள்புரம், கபீஸ்தலம் ஆகிய ஊர்களைத் தாண்டி உள்ளிக்கடை எனும் ஊர் வரும். 

உள்ளிக்கடை ஊரைத்தாண்டியதும் இந்தத் தலமான ஆடுதுறை இருக்கிறது.

*(ஆடுதுறை எனும் பெயரில் மற்றொரு தலம் இருப்பதாலும், இத்தலத்திற்கு பக்கத்தில் பெருமாள் கோவில் எனும் வைணவத் தலம் இருப்பதாலும், இந்தத் தலம் அந்த ஆடுதுறையினின்றும் வேறுபட்டதரிய ஆடுதுறை பெருமாள் கோவில் என்று வழங்குகிறது. வடகுரங்காடுதுறை என்று சொல்லிக் கேட்டீர்களானால் எவருக்கும் தெரியாது.

*பெயர்க் காரணம்:.*
வாலி என்ற குரங்கு வழிபட்டதால் குரங்காடுதுறை ஆயிற்று. 

திருவிடைமருதூருக்கு அருகில் ஆடுதுறை என ஒரு தலம் உள்ளது. இதை தென் குரங்காடுதுறை என அழைத்து வழங்கப்பட்டு வருகிறது.

ஆதலால் இத்தலத்தை வட குரங்காடுதுறை என அழைக்கப் பெறுகின்றது.

கர்ப்பிணியின் தாகத்தைத் தீர்க்க தென்னங்குலையை இறைவன் வளைத்துக் கொடுத்ததால், குலை வணங்கீசர் என்றும், சிட்டுக்குருவி வந்து வணங்கப் பெற்றதால், சிட்டிலிங்கேஸ்வரர் என்ற பெயரும் இறைவனுக்கு உண்டு.

*தேவாரம் பாடியவர்கள்:.*
*சம்பந்தர்* 3--ல் , ஒரு பதிகம் மட்டுமே.

*கோவில் அமைப்பு:.*
கோவில் ஐந்து நிலை இராஜ கோபுரம் உடையவை.

இரண்டு பிரகாரங்கள் இருக்கின்றன.

விநாயகர், சுப்பிரமணியர், கஜலட்சுமி, விஸ்வநாதர் சந்நிதிகளும் இருக்கின்றன. 

விமானத்தில் வாலி வணங்கித் துதிக்கும் சிற்பம் உள்ளன. 

இத்தலத்தில் நடராசர் சிவகாமியுடன் மூலவராக காட்சி வழங்குகிறார்.

சனி, பைரவர், சூரியன், சந்திரன் திருமேனிகள் இருக்க அவர்களையும் வணங்கி நகர்கிறோம்.

நால்வர் சந்நிதியில் மூவர் மட்டுமே இருக்கின்றனர்.

இத்தலத்து வரலாறான (கர்ப்பிணி) செட்டிப் பெண்ணின் உருவம் உள்ளது

நாம் சென்று உள் வாயிலைத் தாண்டியதும்,  வலதுபுறமாய் நவக்கிரக சந்நிதி அமைந்துள்ளன.

கோஷ்டத்தில் கருவறை ஈசனின் பின்புற மாடத்தில் லிங்கோத்பவர் உருவச் சிலைக்கு பதிலாக அர்த்தநாரீஸ்வரர் உருவச்சிலை இருக்கின்றது.

இந்த அமைப்பு சோழர் காலத்திற்கு முற்பட்ட கோவிலாகும்.

மூலவருக்கு எதிரில் நந்தி இருக்கிறார்.

வலப்பக்கம் பாதுகாப்பதென்பதற்கு அறை இருக்கப் பெறுகிறது.

பக்கவாட்டு வாயில் இடபக்கத்தில் சாளரம் உள்ளது.

முற்காலத்தில் இவ்விடத்தில் சுரங்கம் இருந்ததாம். 

அச்சுரங்கம், தஞ்சாவூர் அரண்மனைக்கோ, அல்லது தஞ்சை பெருவுடையார் கோவிலுக்கோ போகும் பாதையாக இருந்திருக்க வேண்டுமாம் என்கின்றனர்.

அந்தச் சுரங்க வழிப்பாதையினையும் பல ஆண்டுகளுக்கு முன்னரே மூடி விட்டனர்.

தெற்கு கோஷ்டத்தில் வழக்கமாக சனகாதி முனிவர்கள் நால்வர் இருக்கிறார்கள். மேலும் கூடுதலாக நான்கு பேர்கள் இருக்கிறார்கள்.

அவர்கள், கந்தவர்கள் கிம்புருடர்கள் ஆவார்கள்.

வடக்குக் கோஷ்டத்தில் பிரம்மா, அஷ்டபுஜ துர்க்கை பிரயோக சக்கரத்துடன் தரிசனம் தருகின்றனர்.

அம்பாள் சந்நிதி- முகமண்டபம், மகா மண்டபம், அர்த்த மண்டபம் ஆகிய அமைப்புகளுடன் இருக்கிறாள்.

காசி விஸ்வநாதரும், கஜலட்சுமியும் வடக்குத் 
திருச்சுற்றில் உள்ளார்கள்.

வடகிழக்கு மூலையில் தெற்கு பார்த்த நடராசர் சபை இருக்கின்றது.

இத்தலத்தின் நடராசர் மற்ற தலங்களில் உள்ள நடராசரைக் காட்டிலும் வேறுபட்டவர்.

செப்பு, ஐம்பொன் போன்ற உலோகச் சிலையாக இருப்பார். இங்கே எழுந்தருளி ஆனந்த தாண்டவம் ஆடுகிற மூர்த்தி ஆதிமூர்த்தி எனவே மூலவராக சிலாரூபமாக (கற்சிலை காட்சியளிக்கிறார்.)

*தல அருமை:.*
கர்ப்பிணி பெண் ஒருத்தி காவிரிக்கரை ஓரமாகச் சென்று கொண்டிருந்தாள். 

வயிற்றுச் சுமையோடு கொளுத்தும் வெயிலில் நடந்த அவளுக்கு தண்ணீர் தாகம் எடுத்தது.

அருகேயோ, தண்ணீர் கொணர்ந்து தர எவரையும் காணோம்.

கண்ணுக்கு எதிரேகாவிரி ஓடினாலும், ஆற்றின் அருகே வந்து குனிந்து நீரை அள்ளி பருக அவளுக்குத் திராணியில்லாமலிருந்தது.

பெண்ணின் பரிதவிப்பு இறைவனுக்குப் புரிந்தது. 

செல்லமகளை குனிய வைக்காமல் தென்னை மரத்தை வளைத்துச் சாய்த்து குனிய வைத்தார்.

பெண்ணின் வாய்க்கருகே சாய்ந்து வந்தது தென்னங்குலை.

குலையை வளைத்து கருணை புரிந்ததால் குலைவணங்கீசர் என்று இறைவன் பெயர் பெற்றார்.

*தல பெருமை:.*
சிவன் கர்ப்பிணிக்கு அருள் செய்ததால் இக்கோயிலுக்கு அதிகமாக கர்ப்பிணிப் பெண்களே வருகிறார்கள். 

விஷ்ணு துர்க்கை கையில் சங்கு சக்கரத்துடன் அருள்பாலிக்கிறார். பாலாபிஷேகம் செய்தால் பால் நீல நிறமாகக் காட்சியளிப்பது சிறப்பாகும்.

*திருவிழாக்கள்:.*
பங்குனி உத்திர திருவிழா.
நவராத்திரி பத்து நாள் விழா.
நடராசருக்கு வருஷத்தில் ஆறு அபிஷேகங்கள் சிறப்பாக நடைபெறுகிறது.
கார்த்திகையில் அம்பிகையை பெண்கள் நூற்றியெட்டு முறை வருவது இங்கு சிறப்பு.

*பூஜை.*
சிவாகம முறையில் நான்கு கால பூஜை.

காலை 8-00 மணி முதல் பகல் 12-00 மணி வரை.

மாலை 4-00 மணி முதல் இரவு 8-00 மணி வரை.

*அஞ்சல் முகவரி:*
அருள்மிகு. தயாநிதீஸ்வரர் திருக்கோயில்.
ஆடுதுறை பெருமாள் திருக்கோயில்.
உள்ளிக்கடை அஞ்சல்.
பாபநாசம் வட்டம் - 614 202
(வழி) கணபதி அக்கிரஹாரம்,
தஞ்சை மாவட்டம்.

*தொடர்பு*
ராஜுவ் குருக்கள், ரவிச்சந்திரன்.
93642 39391....
04374-- 240491
04374-- 244191

               திருச்சிற்றம்பலம்.

*நாளை.....திருப்பழனம்.*

■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள், இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*

No comments:

Post a Comment