Tuesday, May 23, 2017

Meenakshi Pancaratnam with meaning

Courtesy: Sri.GS.Dattatreyan

உத்யத்பானு சஹஸ்ரகோடி சத்ருசாம் கேயூர ஹாரோஸ்வலாம்
பிம்போஷ்டீம் ஸ்மிததங்க்த பங்க்தி ருசிராம் பீதாம்பராலங்க்ருதாம்
விஷ்ணு ப்ரஹ்ம சுரேந்த்ர ஸேவித பதாம் தத்வ ஸ்வரூபாம் சிவாம்
மீனாக்ஷீம் ப்ரணதோஸ்மி ஸந்ததம் அஹம் காருண்யவாராம் நிதிம்

உத்யத்பானு சஹஸ்ரகோடி சத்ருசாம் - ஆயிரம் கோடி உதயசூரியனின் ஒளிக்கு ஈடான ஒளியை உடையவளும்

கேயூர ஹாரோஸ்வலாம் - வளையல்கள், மாலைகள் போன்ற அணிகளால் ஒளிவீசுபவளும்

பிம்போஷ்டீம் - கோவைப்பழங்கள் போன்ற இதழ்களை உடையவளும்

ஸ்மித தங்க்த பங்க்தி ருசிராம் - புன்னகை புரியும் பல்வரிசைகள் உடையவளும்

பீதாம்பராலங்க்ருதாம் - பொன் பட்டாடைகளால் அழகு பெற்றவளும்

விஷ்ணு ப்ரஹ்ம சுரேந்த்ர ஸேவித பதாம் - திருமால், பிரமன், தேவர் தலைவன் போன்றவர்களால் வணங்கப்பட்ட திருவடிகளை உடையவளும்

தத்வ ஸ்வரூபாம் - உண்மைப் பொருளானவளும்

சிவாம் - மங்கள வடிவானவளும்

காருண்யவாராம் - கருணைக்கடல் ஆனவளும்

நிதிம் - பெரும் செல்வம் ஆனவளும் ஆன

மீனாக்ஷீம் ப்ரணதோஸ்மி ஸந்ததம் அஹம் - மீனாட்சியை அடியேன் எப்பொழுதும் வணங்குகிறேன்.

முக்தாஹார லஸத் கிரீடருசிராம் பூர்ணேந்து வக்த்ர ப்ரபாம்
சிஞ்சந் நூபுர கிண்கிணீ மணிதராம் பத்மப்ரபா பாஸுராம்
ஸர்வாபீஷ்ட பலப்ரதாம் கிரிஸுதாம் வாணீ ரமா ஸேவிதாம்
மீனாக்ஷீம் ப்ரணதோஸ்மி ஸந்ததம் அஹம் காருண்யவாராம் நிதிம்

முக்தாஹார லஸத் கிரீடருசிராம் - முத்துமாலைகளால் சூழப்பட்ட ஒளிவீசும் மௌலியை (மகுடத்தை) உடையவளும்

பூர்ண இந்து வக்த்ர ப்ரபாம் - ஒளி வீசும் முழுமதியைப் போன்ற திருமுகத்தை உடையவளும்

சிஞ்சந் நூபுர கிண்கிணீ மணிதராம் - கிண் கிண் என்று ஒலி செய்யும் மாணிக்க சிலம்புகளை அணிந்தவளும்

பத்மப்ரபா பாஸுராம் - தாமரை போல் அழகு பொருந்தியவளும்

ஸர்வாபீஷ்ட பலப்ரதாம் - அடியவர்களின் ஆசைகள் அனைத்தையும் அருளுபவளும்

கிரிஸுதாம் - மலைமகளும்

வாணீ ரமா ஸேவிதாம் - கலைமகளாலும் அலைமகளாலும் வணங்கப்பட்டவளும்

காருண்யவாராம் - கருணைக்கடல் ஆனவளும்

நிதிம் - பெரும் செல்வம் ஆனவளும் ஆன

மீனாக்ஷீம் ப்ரணதோஸ்மி ஸந்ததம் அஹம் - மீனாட்சியை அடியேன் எப்பொழுதும் வணங்குகிறேன்.

ஸ்ரீவித்யாம்
சிவவாமபாகநிலயாம் ஹ்ரீம்கார மந்த்ரோஜ்வலாம்
ஸ்ரீசக்ராங்கித பிந்து மத்ய வஸதீம் ஸ்ரீமத் சபாநாயகீம்
ஸ்ரீமத் ஷண்முக விக்னராஜ ஜனனீம் ஸ்ரீமத் ஜகன்மோஹினீம்
மீனாக்ஷீம் ப்ரணதோஸ்மி ஸந்ததம் அஹம் காருண்யவாராம் நிதிம்

ஸ்ரீவித்யாம் - மறைகல்வி வடிவானவளும்

சிவவாமபாகநிலயாம் - சிவபெருமானின் இடப்பாகத்தில் வசிப்பவளும்

ஹ்ரீம்கார மந்த்ரோஜ்வலாம் - ஹ்ரீம் என்ற வித்தெழுத்து மந்திரத்தில் (பீஜாக்ஷர மந்திரம்) ஒளி வீசி இருப்பவளும்

ஸ்ரீசக்ராங்கித பிந்து மத்ய வஸதீம் - ஸ்ரீசக்ரத்தின் நடுவட்டத்தில் வசிப்பவளும்

ஸ்ரீமத் சபாநாயகீம் - சுந்தரேசுவரனின் சபைக்குத் தலைவியும்

ஸ்ரீமத் ஷண்முக விக்னராஜ ஜனனீம் - ஆறுமுகனான முருகனையும் தடைகளை நீக்கும் விநாயகனையும் பெற்றவளும்

ஸ்ரீமத் ஜகன்மோஹினீம் - உலகங்களை மயக்குபவளும்

காருண்யவாராம் - கருணைக்கடல் ஆனவளும்

நிதிம் - பெரும் செல்வம் ஆனவளும் ஆன

மீனாக்ஷீம் ப்ரணதோஸ்மி ஸந்ததம் அஹம் - மீனாட்சியை அடியேன் எப்பொழுதும் வணங்குகிறேன்.

ஸ்ரீமத் சுந்தரநாயிகாம் பயஹராம் ஞானப்ரதாம் நிர்மலாம்
ச்யாமாபாம் கமலாசனார்ச்சிதபதாம் நாராயணஸ்யானுஜாம்
வீணா வேணு ம்ருதங்க வாத்ய ரசிகாம் நானாவிதாமம்பிகாம்
மீனாக்ஷீம் ப்ரணதோஸ்மி ஸந்ததம் அஹம் காருண்யவாராம் நிதிம்

ஸ்ரீமத் சுந்தரநாயிகாம் - சுந்தரேசருடைய நாயகியும்

பயஹராம் - அடியவர்களுடைய பயத்தை நீக்குபவளும்

ஞானப்ரதாம் - அடியவர்களுக்கு பேரறிவை (ஞானத்தை) நல்குபவளும்

நிர்மலாம் - குறையொன்றும் இல்லாதவளும்

ச்யாமாபாம் - கருநீல நிறம் கொண்டவளும்

கமலாசன அர்ச்சித பதாம் - தாமரையில் அமர்ந்திருக்கும் பிரம்மனால் அருச்சிக்கப்பட்ட திருவடிகளை உடையவளும்

நாராயணஸ்ய அனுஜாம் - நாராயணனுடைய தங்கையும்

வீணா வேணு ம்ருதங்க வாத்ய ரசிகாம் - யாழ், குழல், மிருதங்கம் முதலியவற்றின் இசையை இரசிப்பவளும்,

நானாவிதாம் அம்பிகாம் - பல்விதமான உயிர்களுக்கு அன்னையும்

காருண்யவாராம் - கருணைக்கடல் ஆனவளும்

நிதிம் - பெரும் செல்வம் ஆனவளும் ஆன

மீனாக்ஷீம் ப்ரணதோஸ்மி ஸந்ததம் அஹம் - மீனாட்சியை அடியேன் எப்பொழுதும் வணங்குகிறேன்.

நாநா யோகி முநீந்த்ர ஹ்ருந் நிவஸதீம் நாநார்த்த சித்திப்ரதாம்
நாநா புஷ்ப விராஜிதாங்க்ரியுகளாம் நாராயணேனார்ச்சிதாம்
நாதப்ரஹ்மமயீம் பராத்பரதராம் நாநார்த்த தத்வாத்மிகாம்
மீனாக்ஷீம் ப்ரணதோஸ்மி ஸந்ததம் அஹம் காருண்யவாராம் நிதிம்

நாநா யோகி முநீந்த்ர ஹ்ருந் நிவஸதீம் - சிறந்த யோகிகள், முனிவர்கள் போன்றவர்களின் இதயத்தில் என்றும் வசிப்பவளும்

நாநார்த்த சித்திப்ரதாம் - வேண்டும் அனைத்துப் பொருட்களையும் தருபவளும்

நாநா புஷ்ப விராஜித அங்க்ரியுகளாம் - எல்லாவிதமான பூக்களாலும் அழகு பெற்ற திருவடிகளை உடையவளும்

நாராயணேன அர்ச்சிதாம் - நாராயணனாலும் அருச்சிக்கப்பட்டவளும்

நாதப்ரஹ்மமயீம் - நாதபிரம்ம உருவானவளும்

பராத்பரதராம் - உயர்ந்ததிலும் உயர்வானவளும்

நாநார்த்த தத்வாத்மிகாம் - அனைத்துப் பொருட்களிலும் உள்நின்று இயக்குபவளும்

காருண்யவாராம் - கருணைக்கடல் ஆனவளும்

நிதிம் - பெரும் செல்வம் ஆனவளும் ஆன

மீனாக்ஷீம் ப்ரணதோஸ்மி ஸந்ததம் அஹம் - மீனாட்சியை அடியேன் எப்பொழுதும் வணங்குகிறேன்

No comments:

Post a Comment