Thursday, March 15, 2018

Aditya hrudayam in tamil part 4 to 8

courtesy:Smt.Dr.Saroja Ramanujam

ஆதித்ய ஹ்ருதயம் -4

ஹரிதச்வ: ஸஹஸ்ரார்ச்சி: ஸப்தஸப்தி: மரீசிமான்
திமிரோன்மதன: சம்பு: த்வஷ்டா மார்த்தாண்ட அம்சுமான்

1.ஹரிதச்வ:- 1. ஹரித் +அச்வ: -ஹரித் என்பது சூரியனின் குதிரைகள். அவைகளைக் கொண்டவன் என்ற பொருளில் இது சூரியனைக் குறிக்கும்.

ஹரித் என்றால் விஷ்ணு. அச்வ – கிரணங்கள். ஹரித் என்ற சொல்லுக்கு பச்சை என்றும் பொருள். மரகத வர்ணத்தின் கதிர்வீச்சு. பச்சைமாமலை போல் மேனி , மரகத மணி வண்ணன் என்று கூறப்படும் நாராயணனுக்கும் பொருந்தும்.

2.ஸஹஸ்ரார்ச்சி:- சஹாஸ்ரார்ச்சி; - ஆயிரம் கிரணங்களை உடையவன். ஸஹஸ்ரார்சி: என்ற நாமம் ஸஹஸ்ரநாமத்தில் இருக்கிறது. ஆயிரம் கிரணங்கள் என்பது எங்கும் பரவியுள்ள பகவானின் தேஜசைக் குறிப்பதாகும்

3 ஸப்தஸப்தி: -ஸப்தி என்றால் குதிரை. சூரியனுக்கு ஏழு குதிரைகள். அதனால் சப்தசப்தி எனப்படுகிறான் ஸப்தவாஹன:என்ற சொல் ஸஹஸ்ர நாமத்தில் இருக்கிறது. சூரியனின் ஏழு குதிரைகள் எனப்படும் ஏழு சந்தஸ், காயத்ரி, அனுஷ்டுப், ப்ருஹதீ, பங்க்தி , த்ருஷ்டுப், ஜகதீ, உஷ்ணிக் , இவையாவன பிரம்மத்தை வெளிப்படுத்தும் வேத மந்திரங்களின் தேவதைகள். இவையே பிரம்மத்தின் வாகனங்களாக ஸஹஸ்ர நாமத்தில் விளக்கப்பபடுகின்றன.

4.மரீசிமான்-மரீசி என்றால் கிரணங்கள். மரீசி: என்ற நாமம் ஸஹஸ்ரநாமத்தில் பராசர பட்டரால் பின்வருமாறு விளக்கப்படுகிறது . ஜனுஷா அந்தேப்ய: அபி பிரகாசித நிர்மலரூப: , பிறவிக்குருடருக்கும் பிரகாசிக்கும் சுத்த ஒளி. அதாவது சூர்தாஸருக்குக் காண்பித்த ஸ்வரூபம்.

5.திமிரோன்மதன: - இருளை அகற்றுபவன். அக்ஞான இருளைப்போக்கும் ஞான சூரியன்.,

6.சம்பு:-சம் என்றால் ஸுகம்.ஸுகம் பாவயதி இதி சம்பு: . சூரியன் இருளை அகற்றி சுகம் கொடுப்பதால் சம்பு எனப்படுகிறான். சம்பு என்ற நாமம் ஸஹஸ்ர நாமத்தில் இந்தப் பொருளில் விளக்கப்படுகிறது. சங்கரர் 'தன் குணங்களால் மகிழ்விப்பவன் என்று பொருள் கூறுகிறார். விச்வசம்புவம் என்ற சொல் நாராயண சூக்தத்தில் உலகிற்கு நன்மையை செய்பவன் என்ற அர்த்தத்தில் சொல்லப்படுகிறது.

7. த்வஷ்டா- ஒரு சிற்பி கல்லை செதுக்கி கல்லினுள் இருக்கும் சிற்பத்தைக் காட்டுவது போல தன் ஒளியால் உலகை இருள் என்னும் போர்வையை விலக்கிக் காண்பிப்பதால் சூரியன் த்வஷ்டா எனப்படுகிறான். பரமாத்மா இந்த பிரபஞ்சத்திற்கு வடிவம் கொடுத்து, சித் அசித் என்பவைகளை இனம் பிரிக்கிறார். நாம ரூபத்தைக் கொடுக்கிறார்.

8. மார்த்தாண்ட :- மார்த்தாண்ட என்ற சொல் பன்னிரண்டு என்ற எண்ணிக்கையைக் குறிக்கும். பண்ணிரண்டு ஆதித்தியர்கள் . அதில் விஷ்ணுவும் ஒருவர். ஆதித்யானாம் அஹம் விஷ்ணு: என்று கீதையில் சொல்கிறார். அதிதியின் புத்திரன் என்ற பொருளில் பார்த்த்கால் வாமனருக்கும் இது பொருந்துகிறது. மார்த்தாண்ட " என்றால் சூரியனுக்கு அதிதேவதை என்றும் பொருள்.மேலும் நாராயணனின் பன்னிரண்டு நாமத்தைக் குறிப்பதாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

9.அம்சுமான் –அம்சு என்றால் ஒளிக்கதிர். அம்சுமான் – ஒளிவீசும் கிரணங்களை உடையவன். நாராயணன் ஸஹஸ்ராம்சு: என்று கூறப்படுகிறார். இங்கு ஸஹஸ்ராம்சு என்பதற்கு அபரிமிதா:அம்சவ: ஞானானி அஸ்ய - எல்லையில்லா ஞான ஒளியை உடையவன் (omniscient) என்று பராசரர் கூறுகிறார். 

ஆதித்யஹ்ருதயம் 5

ஹிரண்யகர்ப: சிசிர: தபனோ பாஸ்கரோ ரவி: 
அக்னிகர்போ அதிதே: புத்திர: சங்க: சிசிரநாசன:

1. ஹிரண்யகர்ப: -பொன்மயமான உட்புறம் கொண்டவன் என்பது சூரியனின் நாமம்.ஹிரண்யகர்ப: என்ற பெயர் சஹஸ்ர நாமத்திலும் காணப்படுகிறது. ஹிரண்யாண்டாந்தவர்த்தித்வாத் என்று பராசர பட்டர் வியாக்யானம். ஹிரண்யாண்டம் என்பது பிரபஞ்சத்தின் கரு. (cosmic egg ) , அதை உண்டாக்குபவன் பரமாத்மா அல்லது பிரம்மம். அதுவே பிரும்மாண்டம். ஹிரண்யம் என்னும் பரமபதத்தில் வசிப்பவன் என்று சங்கரரின் விளக்கம்.

2. சிசிர: இதன் பொருள் குளிர்ந்த என்பது. இது சூரியனுக்கு எவ்வாறு பொருந்தும் என்றால் சூரியன் மையப்பாகம் குளிர்ந்திருக்கும் என்பது. சூரிய நமஸ்காரத்தின் போது விரல்களைக் கோர்த்து அதன் வழியே சூரியனைப் பார்த்தவர்களுக்குத் தெரியும்.சூரியனுள் இருக்கும் பகவான் குளிர்ந்த கடாக்ஷம் கொண்டிருப்பதால் சிசிர: என்று அழிக்கப்படுகிறான்.

3. தபன: - எரிப்பவன் சூரியன். பகவானும் தன் பக்தர்களை துன்புருத்துகிறவர்க்கு .தபன: அதாவது நெருப்பைப்போல இருப்பான்.மேற்கூறிய இரண்டு சொற்களையும் சேர்த்துப பார்த்தால், சூரியனுள் காணப்படும் புருஷன் தங்கமயமானவன், என்பது பொன்னிறப பிடரிமயிர் கொண்ட நரசிம்மனையே நினைவூட்டுகிறது.

தேசிகர் காமாஸிகாஷ்டகத்தில் நரசிம்ஹனை தபனேந்துஅக்னி நயன: என்று வர்ணிக்கிறார் . அதாவது அவன் சூரியன் சந்திரன் அக்னி என்ற மூன்று கண்களை உடையவன், திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற்போல் என்று ஆண்டாள் வர்ணித்தபடி.

பக்தர்களை நோக்கும்போது சந்திரனைப்போல் குளிர்ந்த நோக்கு அதாவது சிசிர: , அவர்க்கு தீங்கு விளைவிப்பவர்களிடம் தபன: எரிக்கும் பார்வை. இதேதான் ஸஹஸ்ரநாமத்திலும் சந்த்ராம்சு: , சந்திரனைப்போல் குளிர்ந்த ஒளியும் பாஸ்கரத்யுதி: , சூரியனைப்போல் தீவிர ஒளியும் உடையவன் என்று காணப்படுகிறது.

4. பாஸ்கர: - சூரியனின் பெயர். பா: கரோதி இதி பாஸ்கர:. ஒளியை உண்டாக்குபவன். யாருடைய ஒளியால் எல்லாம் ஒளிர்கிறதோ அந்த பரமாத்மா.

5. ரவி: -சூரியன் உத்தராயணத்தில் ரவி எனப்படுகிறான். பகவான் ரவி என்று கூறப்படுவது ரூயதே இதி ரவி: என்ற பொருளில். ரூயதே என்றால் துதிக்கப் படுகிறவன் என்று பொருள். ரவ என்பதற்கு சப்தம் என்று பொருள். ரூயதே என்றால் சப்தத்தை சிருஷ்டித்தவன் அதாவது பரமாத்மா. சப்தம்தான் முதலில் ஸ்ருஷ்டிக்கப்பட்டது சப்தத்தின் ஸ்தூல வடிவமான ஆகாசம்தான் முதல் பஞ்ச பூதம். எல்லா சப்தத்திற்கும் மூலம் பிரணவம். பகவான் ப்ரணவஸ்வரூபம்.,

6. அக்னிகர்ப: - நெருப்பு மயமானவன் என்பது சூரியன். அக்னி யாரிடம் இருந்து உண்டானதோ அவன் அக்னிகர்பன். கீதையில் பகவான் 'அஹம் வைச்வானரோ பூத்வா ப்ராணிநாம் தேஹம் ஆஸ்ரித:' எல்லா உயிர்களுக்கும் உள்ளே நானே நெருப்பாக இருக்கிறேன் என்கிறார். ஆத்மாவின் உள் இருக்கும் பரமாத்மா என்று பொருள். உள்ளிருக்கும் நெருப்பாகிற ஆத்மா நீங்கினால் தேகம் குளிர்ந்துவிடுவதைப் பார்க்கிறோம்..

7. அதிதே: புத்திர: அதிதியின் புத்திரன். இது முன்னமே விளக்கப்பட்டிருக்கிறது.

8. சங்க:-சங்க என்றால் வடமொழியில் பத்தாயிரம் கோடி என்று ஒரு அர்த்தம். சூரியன் தொலை தூரத்திலிருபப்தால் இந்தப் பெயர் சொல்லப்பட்டிருக்கலாம்.'தத் ஐச்சத பஹுசஸ்யாம் ப்ரஜயேய,' எனற உபநிஷத் வாக்கியப்படி பல்லாயிரம் உயிர்களை உடைய ப்ரபஞ்சத்தை சிருஷ்டித்த பரம்பொருள் என்றும் பொருள் கொள்ளலாம்.

9. சிசிரநாசன: -குளிரை அகற்றுவதால் சூரியனுக்கு இந்தப் பெயர். சம்சாரமாகிய பனியால் வருந்தும் உயிர்களுக்கு சூரியனைப்போல் இதம் அளிப்பவன் பகவான்.

ஆதித்யஹ்ருதயம் 6

வ்யோமனாதச்தாமோ பேதீ ரிக்யஜுஸ்ஸாமபாரக:
கனவ்ருஷ்டிரபாம் மித்ரம் விந்த்யவீதீ ப்லவங்கம:

1.வ்யோமநாத:-வ்யோமன் என்றால் ஆகாசம் அதனால் ஆகாயத்தின் தலைவன் என்பது சூரியனுக்குப பொருந்தும். 
தைத்திரீய உபநிஷத்தில் 'சத்யம் ஞானம் ஆனந்தம் பிரம்ம. யோ வேத நிஹிதம் குஹாயாம் பரமே வ்யோமன் ,'என்ற வாக்கியம் காணப்படுகிறது.

இங்கு வ்யோமன் என்ற சொல்லிற்கு சூக்ஷ்ம ஆகாசம் ( unmanifested space) என்று பொருள் கூறப்படுகிறது. ஸ்ரிஷ்டிக்ரமத்தில் ஆகாசம்தான் முதல் ஆனதால் வ்யோமநாத: என்பது பரமாத்மாவே என்று கொள்ளலாம்.

2.தமோபேதீ-இருளை அகற்றுபவன் சூரியன். அக்ஞானம் ஆகிய இருளைப போக்கி ஞானத்தை அருளுபவன் பகவான்.

3. ருக் யஜுஸ்ஸாம பாரக:-சூரியன் மூன்று வேதங்களிலும் கரை கண்டவன் என்பது தெரிந்ததே. யாக்ஞவல்க்யருக்கு யஜூர்வேதம் உபதேசித்தவன் ஆஞ்சநேயருக்கும் உபதேசித்தான்.

பாரக: என்னும் சொல் கரை கண்டவன் என்ற பொருளில் உபயோகப்படுத்தப் படுகிறது. ஆனால் அதன் உண்மைப்பொருள் பிரம்மமே . வேதங்கள் பகவானுடைய வாக்கு..அவன் வேதங்களுக்கும் அப்பாற்பட்டவன் அதனால் பாரக்: என்று கூறப்படுகிறான். பாரக என்ற சொல்லுக்கு , அப்பாற்பட்டவன் ( beyond) என்றும் பொருள்

.தேசிகன் யாதவாப்யுதயத்தில் வேதங்களும் அவனை அறிய முடியவில்லை என்று கூறுகிறார் . அதனால் பரமாத்மா வேதங்களுக்கும் அப்பாற்பட்டவன்.

4. கனவ்ருஷ்டி: கனமழையை கொடுப்பவன். சூரியன் நீரை ஆவியாக்கி மேகங்கள் மூலம் மழையை கொடுக்கிறான்.பகவான் தன் கருணை என்னும் மேகத்தின் மூலம் அருள் என்ற மழையைப பொழிகிறான். 
தாபத்ரயம் என்னும் நெருப்பை கருணையால் அணைத்து அருள் மழை பொழிகிறான். இதனால்தான் சஹஸ்ர நாமத்தில் அவன் பர்ஜன்ய: என்று சொல்லப்படுகிறான். பர்ஜன்யம் என்றால் மழை என்று பொருள்.

5.அபாம் மித்ர: - அபாம் என்றால் நீரினுடைய என்று அர்த்தம். அதாவது நீருக்கதிபதியான வருணனுடைய மித்ர: நண்பன் என்று சூரியனைக் குறிக்கிறது. ஆப: என்றால் நீர். அபாம் என்பது அதன் ஆறாம் வேற்றுமை . 'உடைய' என்ற பொருள்.

ஆப: என்றால் லோகா: அதாவது மனிதர்கள் என்றும் பொருள். 'ஆபோ நாரா: இதி ப்ரோக்தோ ஆபோ வை நர சூநவ: ,' – மனுஸ்ம்ருதி. ஆப: நாரா: இரண்டுக்கும் ஒரே அர்த்தம் என்று பொருள்.
'நாராணாம் அயனம் இதி நாராயண:' எல்லா உயிர்களுக்கும் இருப்பிடம்( ஸர்வவ்யாபித்வம்) ஆனவன், நாரானாம் அயனம் அஸ்ய , எல்லா உயிர்களும் இவன் இருக்கும் இடம்( அந்தர்யாமித்வம்) என்பது நாராயண நாமம். 
அபாம் மித்ர: என்றால் எல்லா உயிர்களுக்கும் நண்பன் என்று பொருள். பகவானே உண்மையில் நம் பந்து, நண்பன்

6.விந்த்ய வீதி –நேரிடைப்பொருள், விந்த்யமலையை கடக்கிறவன் அல்லது விந்த்யமலை வழியாகச் செல்கிறவன் என்று சூரியனின் பெயர். 
உண்மையில் சூரியன் நகர்வதில்லை. பூமியே நகர்கிறது .ஆனாலும் சூரியன் கிழக்கிலிருந்து மேற்கு செல்வதைப்போல் தோன்றுகிறது. அதனால் விந்தய மலையைத் தாண்டிச் செல்கிறான் என்று கூறப்படுகிறது.

7.ப்லவங்கம: -ப்லவங்கம என்றால் குதித்துத் தாண்டிச் செல்வது. குரங்கு அல்லது மான் இந்தப் பெயரால் அழைக்கப்படுகின்றன. சூரியன் விந்தய மலையை தாண்டிச்செல்வதால் பிலவங்கம: என்னும் நாமம்.

இந்த இரண்டு சொற்களையும் சேர்த்துப் பார்த்தால் நம் தேகத்தில் ப்ரம்ம நாடி அல்லது சூர்யநாடி என்பது அக்ஞானத்தால் மறைக்கப்பட்ட பிரம்ம சாக்ஷாத்காரம். சூர்யன் எனபது மூலதாரத்தில் இருந்து மேலே எழும்பும் ஒளி. இது விந்த்யம் என்று சொல்லப்படும் மத்திய பாகத்தைத் தாண்டிசென்று பிரம்ம நாடியை அடைகிறது . இந்த ஒளியே அந்தராத்மா எனப்படும் பிரம்மமாகும்.

ஆதித்ய ஹ்ருதயம் 8

நக்ஷத்ரக்ரஹதாராணாம் அதிபோ விச்வ பாவன:
தேஜசாம் அபி தேஜஸ்வீ த்வாதசாத்மன் நமோஸ்து தே 
1.நக்ஷத்ரக்ரஹதாராணாம் அதிப: -நக்ஷத்ரங்கள் க்ரகங்கள் இவற்றிற்கு அதிபன்.சூரியனின் ஒளியாலேயே இவற்றிற்கு ஒளி கிடைப்பதால் சூரியன் இவ்வாறு சொல்லப்படுகிறான். ஆனால் அந்த சூரியனுக்கே ஒளி கொடுக்கும் பரம்பொருளும் இவ்வாறு அழைக்கப்படுகிறார் 
2. விச்வ பாவன:-உலகம் (விஸ்வம்) சூரியனால் தழைக்கிறது. பாவயதி இதி பாவன:, தோற்றுவிப்பவன் என்ற அர்த்தத்தில் இது பரமாத்மாவை குறிக்கிறது. 
3.தேஜசாம் அபி தேஜஸ்வீ –சூரியன் எல்லா ஒளிரும் பொருளிலும் ஒளியாக இருக்கிறான். அந்த சூரியனுக்கே ஒளி கொடுப்பவன் பரமாத்மா.
4. த்வாதசாத்மன்-சூரியன் பன்னிரண்டு மாதங்களுக்கும் பன்னிரண்டு நாமங்கள் கொண்டு விளங்குகிறான். அதனால்தான் த்வாதச ஆதித்தியர்கள் என்று கூறப்படுகிறது. பகவானுக்கும் , கேசவன், நாராயணன், மாதவன், கோவிந்தன், ஹ்ருஷீகேசன், பத்மநாபன், தாமோதரன், விஷ்ணு, மதுசூதனன், த்ரிவிக்ரமன், வாமனன், ஸ்ரீதரன் என்ற பன்னிரண்டு நாமங்கள் உள்ளதால் அவன் த்வாதசாத்மன் எனப் படுகிறான். 
நமோஸ்து தே – உனக்கு நமஸ்காரம்.

நம: பூர்வாய கிரயே பஸ்சிமாயாத்ரயே நம: 
ஜ்யோதிர்கணானாம் பதயே தினாதிபதயே நம:

பூர்வாய கிரயே நம:-கிழக்கு மலையின் உதிப்பவனே உனக்கு நமஸ்காரம்.

பஸ்சிமாய அத்ரயே நம:-மேற்கு மலையில் அஸ்தமனம் ஆகுபவனே உனக்கு நமஸ்காரம்.

கிழக்கு மலை என்பது உதயம் அதாவது சிருஷ்டியைக் குறிக்கும். அதேபோல மேற்கு மலை அஸ்தமனம் அதாவது சம்ஹாரத்தைக் குறிக்கும். பரமாத்மாவே இவ்வுலகின் உதயத்திற்கும் அஸ்தமனத்திற்கும் காரணம் ஆதலால் இதில் அவரே சொல்லப்படுகிறார்.

ஜ்யோதிர்கணானாம் பதயே – ஒளிரும் எல்லாவற்றிற்கும் அதிபதிக்கு
நம: - வணக்கம்.

ஒளிர்பவை எல்லாவற்றிற்கும் அதிபதி . ஏற்கெனவே சொல்லியுள்ளபடி இது சூரியனைக் குறிக்கும் சொல் ஆனாலும் இறைவனையும் குறிக்கும்.

தினாதிபதயே நம:- பகலின் காரணமாக உள்ளவனுக்கு வணக்கம்.சூரியன் உதித்தால் தான் பகல். அதனால் சூரியன் தினாதிபதி எனப்படுகிறான்.

பகல் என்பது சிருஷ்டியின் துவக்கம் என்று எடுத்துக்கொண்டால் இரவு என்பது சிருஷ்டியின் லயம். பகவான் தினாதிபதி. கீதையில்,
சர்வபூதானி கௌந்தேய பிரக்ருதிம் யாந்தி மாமிகாம்
கல்பக்ஷயே புன: தானி கல்பாதௌ விஸ்ருஜாம்யஹம். என்கிறார்.

இதன் பொருள்,
எல்லா உயிர்களும் காலசுழற்சியின் முடிவில் என்னிடம் லயிக்கின்றன. மறுபடி காலத்தொடக்கத்தில் அவைகளை வெளி விடுகிறேன்.

மேலும் பத்தாம் அத்தியாயத்தில் , விபூதியோகத்தில் கால: கலயதாம் அஸ்மி என்று கூறுகிறார். அதன் பொருள், காலம் என்பது நானே . காலத்தின் அளவைகள் என் சக்தியால் ஏற்படுகின்றன. பகல் இரவு, தினம் , மாதம் வருடம் எல்லாமே இதில் அடங்கும்.


ஆதித்த்யஹ்ருதய்ம்-7

ஆதபீ மண்டலி ம்ருத்யு: பிங்கள: சர்வதாபன: 
கவிர்விச்வோ மஹாதேஜா: ரக்த: ஸர்வபவோத்பவ:

1.ஆதபீ – உஷ்ணம் உடையவன். அல்லது நெருப்பைப் போன்றவன். கீதையில் பகவானின் விஸ்வரூபத்தைக் கண்ட அர்ஜுனன் கூறுகின்றான்,

பச்யாமி த்வாம் தீப்தஹுதாச வக்த்ரம் 
ஸ்வதேஜஸா விச்வம் இதம் தஹந்தம்,
உன் முகத்தில் இருந்து நெருப்புஜ்வாலை வரக் காண்கிறேன். உன் தேஜசால் இந்த உலகமே நெருப்பாகக் காண்கிறது. உயிருக்குள் பரமாத்மா தீயாக இருக்கிறார். உயிரின் ஒளி என்றும் சொல்லலாம்.

2.மண்டலீ- வட்டமான உருவத்தை உடையவன் சூரியன்., ஒரு வட்டத்திற்கு ஆரம்பம் எது முடிவு எது என்று தெரிவதில்லை. பிரம்மாண்டம் என்பது இந்த பிரபஞ்சம். அதை தன்னுள் உடையவன் மண்டலீ எனப்படுகிறான்.

3. ம்ருத்யு:- சம்ஹாரம் செய்பவர். உலகை ஆக்கி காத்து அழிக்கும் வல்லமை கொண்ட இறைவன் என்று பொருள். இது சூரியனுக்கு எவ்வாறு பொருந்தும் என்றால், சூரியனையே அந்த பரமாத்மாவாக பாவித்து சொல்லப்படும் அடைமொழி என்று கூறலாம்.

4.பிங்கள;-மஞ்சள் அல்லது பொன் நிறம் கொண்டவன். சூரியமண்டலத்தின் உள் காணப்படும் புருஷன் பரமாத்மா பொன் மயமானவன் என்று உபநிஷத் சொல்கிறது'

5. சர்வதாபன:- எங்கும் உஷ்ணத்தை கொடுப்பவன் சூரியன். பகவான் சர்வதாபன: எல்லா பாபங்களையும் சம்சார துக்கங்களையும் எரிப்பவன்.

6. கவி: - சர்வக்ஞன். சூரியன் வேத பாரகன் ஆகையால் சர்வக்ஞன் என்று சொல்லப்படுகிறான்.கவி என்ற சொல் ஸஹஸ்ரநாமத்திலும் இருக்கிறது.ஸர்வக்ராந்த தர்சித்வாத் கவி: என்று பராசரபட்டர் வியாக்யானம். எல்லாம் அறிந்தவன் என்று பொருள்.

கவி என்றால் சாதாரணமாக கவிஞன் என்ற பொருளில்தான் உபயோகிக்கப் படுகிறது. ஆனால் கவி என்றால் அமரகோசத்தில் அறிஞன், பண்டிதன் என்ற பொருள் காணப்படுகிறது. க்ராந்த என்றால் எல்லை. க்ராந்தாத் கவி: என்றால் அறிவின் எல்லையைக் கடந்தவன் இது இறைவனுக்கே பொருந்தும். 
முக்காலமும்ம் உணர்ந்தவன் கவி எனப்படுகிறான். கீதையில் பகவான், 'வேதாஹம் ஸமவேதானி வர்தமானானி ச அர்ஜுன, பவிஷ்யாணி ச பூதானி மாம் து ன வேத கஸ்சன ,' "நான் கடந்தது இருப்பது வரப்போவது எல்லாம் அறிவேன் ஆனால் என்னை அறிந்தவர் எவருமில்லை ." என்கிறார். 
கீதையிலும் பரமாத்மா கவி என்ற சொல்லால் குறிப்பிடப்படுகிறான். (ப.கீ.8.9)

7. விச்வ: - விச்வம் என்றால் பிரபஞ்சம். சூரியன் எங்கும் காணப் படுவதால் விச்வ என்று அழைக்கப்படுகிறான் .விச்வ என்பது விஷ்ணுஸஹஸ்ர நாமத்தில் முதல் நாமம். விச்வம் என்பதற்கு சர்வம் என்றும் பொருள். சர்வவ்யாபியான பரமாத்மா.
விச் என்ற வினைச்சொல்லுக்கு நுழைவது என்று பொருள். விசதி இதி விச்வ: சர்வவ்யாபி மட்டும் அல்லாமல் எல்லா உயிர்களுக்கும் உள்ளே பிரவேசித்தவன் என்று பொருள்.மேலும் விசதி அஸ்மின் என்று எடுத்துக் கொண்டால் எல்லாம் இறுதியில் அவனுள்ளே பிரவேசிக்கின்றன என்றும் சொல்லலாம்.

8.மஹாதேஜா: மிகுந்த பிரகாசம் உடையவன். இந்த நாமம் ஸஹஸ்ரநாமத்தில் , யேன சூர்யா: தபதி தேஜசேத்த: , எவனுடைய தேஜஸ்ஸினால் சூர்யன் பிரகாசிக்கிறானோ என்று , யஸ்ய பாஸா ஸர்வமிதம் விபாதி' என்ற உபநிஷத் வாக்கியத்திற்கொப்ப பொருள் கூறப்பட்டுள்ளது.

9.ரக்த: - சிவப்பு நிறம் உடையோன்.,சூரியன் உதயாஸ்தமனத்தில் சிவப்பாக காணப்படுகிறான். ரக்த என்றால் ரஜஸ். சத்வம் தமஸ் இவை ரஜஸ் மூலமே சேர்கின்றன அதனால் சிருஷ்டி ஏற்படுகிறது.ரஜஸ் என்றால் செயலாற்றும் சக்தி. பகவான் இந்த பிரபஞ்சத்தை இயக்குவதால் ரக்த: எனப்படுகிறார். 
8.
10. ஸர்வபவோத்பவ:- எல்லா உயிர்களும் வாழக் காரணமாக உள்ளவன் சூரியன். எல்லா உயிர்களையும் ( சர்வபவ) ஸ்ருஷ்டிப்பவன் ( உத்பவ: ) என்றால் அது பரமாத்மாவையே குறிக்கும்.


ஆதித்ய ஹ்ருதயம் 8

நக்ஷத்ரக்ரஹதாராணாம் அதிபோ விச்வ பாவன:
தேஜசாம் அபி தேஜஸ்வீ த்வாதசாத்மன் நமோஸ்து தே 
1.நக்ஷத்ரக்ரஹதாராணாம் அதிப: -நக்ஷத்ரங்கள் க்ரகங்கள் இவற்றிற்கு அதிபன்.சூரியனின் ஒளியாலேயே இவற்றிற்கு ஒளி கிடைப்பதால் சூரியன் இவ்வாறு சொல்லப்படுகிறான். ஆனால் அந்த சூரியனுக்கே ஒளி கொடுக்கும் பரம்பொருளும் இவ்வாறு அழைக்கப்படுகிறார் 
2. விச்வ பாவன:-உலகம் (விஸ்வம்) சூரியனால் தழைக்கிறது. பாவயதி இதி பாவன:, தோற்றுவிப்பவன் என்ற அர்த்தத்தில் இது பரமாத்மாவை குறிக்கிறது. 
3.தேஜசாம் அபி தேஜஸ்வீ –சூரியன் எல்லா ஒளிரும் பொருளிலும் ஒளியாக இருக்கிறான். அந்த சூரியனுக்கே ஒளி கொடுப்பவன் பரமாத்மா.
4. த்வாதசாத்மன்-சூரியன் பன்னிரண்டு மாதங்களுக்கும் பன்னிரண்டு நாமங்கள் கொண்டு விளங்குகிறான். அதனால்தான் த்வாதச ஆதித்தியர்கள் என்று கூறப்படுகிறது. பகவானுக்கும் , கேசவன், நாராயணன், மாதவன், கோவிந்தன், ஹ்ருஷீகேசன், பத்மநாபன், தாமோதரன், விஷ்ணு, மதுசூதனன், த்ரிவிக்ரமன், வாமனன், ஸ்ரீதரன் என்ற பன்னிரண்டு நாமங்கள் உள்ளதால் அவன் த்வாதசாத்மன் எனப் படுகிறான். 
நமோஸ்து தே – உனக்கு நமஸ்காரம்.

நம: பூர்வாய கிரயே பஸ்சிமாயாத்ரயே நம: 
ஜ்யோதிர்கணானாம் பதயே தினாதிபதயே நம:

பூர்வாய கிரயே நம:-கிழக்கு மலையின் உதிப்பவனே உனக்கு நமஸ்காரம்.

பஸ்சிமாய அத்ரயே நம:-மேற்கு மலையில் அஸ்தமனம் ஆகுபவனே உனக்கு நமஸ்காரம்.

கிழக்கு மலை என்பது உதயம் அதாவது சிருஷ்டியைக் குறிக்கும். அதேபோல மேற்கு மலை அஸ்தமனம் அதாவது சம்ஹாரத்தைக் குறிக்கும். பரமாத்மாவே இவ்வுலகின் உதயத்திற்கும் அஸ்தமனத்திற்கும் காரணம் ஆதலால் இதில் அவரே சொல்லப்படுகிறார்.

ஜ்யோதிர்கணானாம் பதயே – ஒளிரும் எல்லாவற்றிற்கும் அதிபதிக்கு
நம: - வணக்கம்.

ஒளிர்பவை எல்லாவற்றிற்கும் அதிபதி . ஏற்கெனவே சொல்லியுள்ளபடி இது சூரியனைக் குறிக்கும் சொல் ஆனாலும் இறைவனையும் குறிக்கும்.

தினாதிபதயே நம:- பகலின் காரணமாக உள்ளவனுக்கு வணக்கம்.சூரியன் உதித்தால் தான் பகல். அதனால் சூரியன் தினாதிபதி எனப்படுகிறான்.

பகல் என்பது சிருஷ்டியின் துவக்கம் என்று எடுத்துக்கொண்டால் இரவு என்பது சிருஷ்டியின் லயம். பகவான் தினாதிபதி. கீதையில்,
சர்வபூதானி கௌந்தேய பிரக்ருதிம் யாந்தி மாமிகாம்
கல்பக்ஷயே புன: தானி கல்பாதௌ விஸ்ருஜாம்யஹம். என்கிறார்.

இதன் பொருள்,
எல்லா உயிர்களும் காலசுழற்சியின் முடிவில் என்னிடம் லயிக்கின்றன. மறுபடி காலத்தொடக்கத்தில் அவைகளை வெளி விடுகிறேன்.

மேலும் பத்தாம் அத்தியாயத்தில் , விபூதியோகத்தில் கால: கலயதாம் அஸ்மி என்று கூறுகிறார். அதன் பொருள், காலம் என்பது நானே . காலத்தின் அளவைகள் என் சக்தியால் ஏற்படுகின்றன. பகல் இரவு, தினம் , மாதம் வருடம் எல்லாமே இதில் அடங்கும்.


No comments:

Post a Comment